நவம்பர் 1ஆம் தேதி பள்ளி திறப்பு இல்லையா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

நவம்பர் 1-ஆம் தேதி முதல் நர்சரி பள்ளிகள் திறக்கப்படும் என்ற செய்தி வெளியான நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ளன என்பது தெரிந்ததே. அதேபோல் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் பிரிகேஜி, எல்கேஜி, யுகேஜி ஆகிய நர்சரி பள்ளிகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை மறுத்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், நர்சரி பள்ளி திறப்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை செய்து இன்று அல்லது நாளை அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment