அமைச்சர் அன்பில் மகேஷ் குணமடைந்து வீடு திரும்பினார் – மருத்துவமனை தகவல்!!

கடந்த சில தினங்களாகவே தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இத்தகைய செய்தியானது திமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அமைச்சர் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அதே சமயம் அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லையென மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.