மாணவி தற்கொலை விவகாரம்: அமைச்சர் அன்பில் மகேஷ் கீழச்சேரி பயணம்!!!

கடந்த சில நாட்களாகவே மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாணவியின் சொந்த ஊரான திருத்தணியில் அவரது உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கீழச்சேரி பள்ளிக்கு புறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக 12-ம் மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சென்றதாக கூறப்படுகிறது.

மேலும், மாணவியின் மரணம் தொடர்பாக காவல்துறையினர் தரப்பில் விசாரணை நடத்தியதில் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என்ற காரணத்திணால் தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment