தேர்வு தேதிகளில் மாற்றமா?… அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி விளக்கம்!

தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே மாதத்தில் நடைபெறும் ஆண்டு இறுதித் தேர்வு தேதியில் மாற்றம் இருக்காது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

“நம் பள்ளி நம் பெருமை” என்ற திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மைக் குழுவை வலுப்படுத்துவதற்கு பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, நம் பள்ளி நம் பெருமை திட்டத்தின் பரப்புரை தொடக்க விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ‘நம் பள்ளி, நம் பெருமை’ என்ற புதிய செயலியை தொடங்கிவைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் நிர்வாக பதவிகளில் அரசியல் தலையீடு இருப்பதாக வரும் புகார்கள் உண்மை இருந்தால், இதுதொடர்பான விவகாரங்கள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

கொரோனா காரணமாகவே இந்த ஆண்டு மே மாதத்தில், இறுதித் தேர்வுகள் நடத்தப்படுவதாகவும், அடுத்த ஆண்டில் வழக்கமான நாட்களிலேயே தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment