மைன் கிராஃப்ட்: ஒரு லட்சம் கோடிக்கு மேல் பார்க்கப்பட்ட முதல் வீடியோ கேம்!

ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ஏதாவது ஒரு மைல்கல் சாதனைகள் நடைபெறும். அந்த வரிசையில் தற்போது மைன் கிராஃப்ட் என்ற கேம் 1 ட்ரில்லியன் பார்வையாளர்களை பெற்று எந்த ஒரு கேமும் செய்யாத சாதனையை புரிந்துள்ளது.

அதன்படி இந்த மைன் கிராஃப்ட் என்பது எல்லா காலத்திலும் மிகப்பெரிய கேம்களில் ஒன்றாகும். இது மாதாந்திர 141 மில்லியனுக்கும் அதிகமான பயனாளிகளை பெற்றுள்ளது.2020ஆம் ஆண்டில் யூ டியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட தலைப்பும் மைன் கிராஃப்ட் ஆகும்.

இப்போதுதான் ஒரு ட்ரில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்த முதல் வீடியோ கேம் என்ற பெருமையும் பிடித்துள்ளது. புதன்கிழமை மைன் கிராஃப்ட் தான் டிரில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்ற முதல் வீடியோ கேம் என்பதை மோஜாக் மற்றும் யூட்யூப் ஆகியவை இணைந்து வெளிப்படுத்தியது. இந்த சாதனை பல வகைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

யூடியூப்பில் 2020ஆம் ஆண்டில் 201 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. எனவே இது ஓர் ஆச்சரியப்பட வேண்டியதில்லை, 2021 ஆம் ஆண்டு இறுதியில் இந்த கேம் தற்போது மொத்தம் ஒரு ட்ரில்லியன் பார்வையாளர்களைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment