ஐடி வேலை வேணாம்.. விவசாயத்தில் கோடிக்கணக்கில் லாபம்.. நெதர்லாந்தில் இருந்து இந்தியா திரும்பிய தம்பதி!

ஐடியில் பணியாற்றியவர்கள் வேலையை விட்டுவிட்டு விவசாயத்தினை வெற்றிகரமாக செய்துவரும் தம்பதியினர் குறித்த செய்தி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

நெதர்லாந்தில் பிராகிராமிங்க் ஹெட்டாக பணிபுரிந்தவர் செல்வம். இவர் 12 ஆம் வகுப்பு படிப்பினை முடித்த பின்னர் கல்லூரிப் படிப்பிற்காக நெதர்லாந்து சென்றவர் செல்வம்.

கல்லூரிப் படிப்பினை முடித்த கையோடு நெதர்லாந்தில் வேலை கிடைத்தது. 18 ஆண்டுகள் ஐடி துறையில் வேலைபார்த்த செல்வம் நெதர்லாந்தினைச் சார்ந்த சக பணியாளர் ஜெக்கோபை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின்னர் ஐடி துறையினை விட்டுவிட்டு தன்னுடைய கனவு வேலையினைச் செய்யத் திட்டமிட்ட செல்வம் மனைவியுடன் இந்தியா வந்துள்ளார்.

சென்னையினை அடுத்து தாழையூரில் அவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் பண்ணையினை ஏற்படுத்தி உள்ளனர். மேலும் கால்நடைகள் வளர்ப்பில் துவங்கி விவசாயம் வரை என கலக்குகின்றனர்.

பால் மற்றும் முட்டை ஏற்றுமதியினை முதன்மை வணிகமாகக் கொண்டு இயங்கும் இந்த பண்ணையில் நிலமானது 6 மாதம் என்ற முறையில் வாடகைக்கு விடப்படுகின்றது.

பல ஐடி தொழில் செய்பவர்களும் இங்கு நிலத்தினைப் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.