ஆவின் நிறுவனத்தை கண்டித்து மதுரையில் பால் வியாபாரிகள் போராட்டம்!

மதுரையில் பால் கொள்முதல் விலையில் லிட்டருக்கு ரூ.7 ஊக்கத்தொகை வழங்கக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவை பால் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளன.

தற்போழுது எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில், தொடர்ந்து பால் வழங்க வேண்டும் என்றும், இதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுரை ஆவின் பொது மேலாளர் எச்சரித்திருந்தார்.

ஆனால், தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலுக்கு, 42 ரூபாய் என பால் சப்ளையை நிறுத்தியதால், நுகர்வோர் கடும் அவதிக்குள்ளாகினர்.

தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் – தமிழக அரசு உத்தரவு!

மதுரை மாவட்டத்தில் 18,000 பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து சராசரியாக 1,36,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும், மற்ற யூனியன்கள் மூலம் பால் கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1.86லி லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.