நெகிழி பையில் பால்பொருட்கள்… தமிழக அரசு அறிக்கை தாக்கல்!!!

நெகிழிப் பைகளில் பால் பொருட்களை விற்பனை செய்வதற்கு அனுமதி அளிப்பதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் 14 நெகிழி பைகளை தடை விதிப்பதாக தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதனை எதிர்த்து உற்பத்தியாளர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கின் விசாரணையானது இன்று அமலுக்கு வந்தது.

இந்நிலையில் ஆவின் நிறுவனத்தின் பால் பாக்கெட்டுகளுக்கு பதிலாக கண்ணாடியில் பொருட்களை விற்பனைசெய்ய முடியுமா? என்று உயர் நீதிமன்றம் அண்மையில் கேள்வி எழுப்பி இருந்தது.

இதற்காக தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் இந்த  தகவல் தெரிவித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதே போல் வழப்பாட்டு தளங்கள், சுற்றுலா தளங்களில் குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் அமைக்க தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை இதுவரையில் பயன்படுத்தியதாக 33 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதோடு வழக்கு விசாரணையானது செப்டம்பர் 22-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.