50 பைசாவிற்கு பால் பாக்கெட்: அலைமோதிய கூட்டத்தினால் பரபரப்பு..!!

சென்னை திருவெற்றியூரில் அதிமுக சார்பாக நடைப்பெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் அதிமுகவினர் 50 பைசாவிற்கு வினியோகம் செய்த பால் பாக்கெட்டுகளை பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு வாங்கினர்.

தமிழகத்தில் சொத்து வரி, மின் கட்டணம், பால் வரி போன்றவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

கேரளாவில் வினோதம்: டிவி ரிமோட் பேட்டரியை விழுங்கிய 2- வயது குழந்தை..!!!

அதன் ஒரு பகுதியாக வட சென்னை அதிமுக சார்பில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியில் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதில் விலைவாசி மற்றும் வரிகளை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் தமிழக அரசின் இறுதியாக விலை நிர்ணயம் செய்யப்பட்ட பாலினை 50 பைசாவிற்கு விற்பனை செய்தனர். இதனால் பெண்கள் பலபேர் கூட்டத்தில் முந்தியடித்துக்கொண்டு பால்பாக்கெட்டுகளை வாங்க ஆர்வம் காட்டினர்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு வழக்கில் திடீர் திருப்பம்!!

இதனை பார்த்த போலீசார் கூட்டநெரிசலை குறைத்து அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாத படி, பொதுமக்களை அனுப்பி வைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.