இன்று நள்ளிரவு முதல்.. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம்!!!

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர் மற்றும் உடன் பயணிப்போர் இருவரிடமும் தலா ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் மக்கள் தொகை என்பது அதிகமாகவே காணப்படுகிறது. அதே சமயம் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கையும் அதிகம் என்றே சொல்லலாம்.

விஷவாயு கசிவில் உயிரிழப்பு: சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை!!

இந்நிலையில் கடந்த சில தினங்களாக குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து காணப்படுகிறது. இதனை தடுக்க சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன் படி, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர் மற்றும் உடன் பயணிப்போர் இருவரிடமும் தலா ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை: உருவானது புதிய காற்றழுத்த பகுதி.. வானிலை அப்டேட்!!

அதே போல் ஓட்டுபவர் மற்றும் உடன் பயணிப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், இத்தகைய நடைமுறையானது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment