Connect with us

அரிவாளை காட்டி கொள்ளை; பெட்ரோல் பங்குகளை குறிவைக்கும் நள்ளிரவு திருடர்கள்

கொலை

தமிழகம்

அரிவாளை காட்டி கொள்ளை; பெட்ரோல் பங்குகளை குறிவைக்கும் நள்ளிரவு திருடர்கள்

நள்ளிரவில் பெட்ரோல் பங்குகளை குறிவைத்து ஆயுதங்களை காட்டி மிரட்டி நடத்தப்படும் திருட்டால் அச்சத்துடன் இரவு பணியை செய்து வரும் ஊழியர்கள்.

விராலிமலையில் அருவாளை காட்டி பெட்ரோல் மற்றும் ரொக்கம், மொபைல் போனை பறித்துச் சென்றவர்களை சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மேலசின்ன பழனிபட்டியை சேர்ந்தவர் சுப்பையா மகன் பாக்யராஜ் (25) இவர் விராலிமலை அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இரவு பெட்ரோல் விற்பனை பணத்துடன் அங்குள்ள அறையில் தூங்கியுள்ளார்.

மற்றோரு ஊழியரான சபரி என்பவர் பெட்ரோல் போடும் பம்ப் அருகே உறங்கியுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெட்ரோல் போடும்படி கூறியபோது அதற்கு பணம் கேட்ட ஊழியரிடம் ஜீ பேயில் அனுப்புவதாக கூறி டேங்க் முழுவதும் பெட்ரோலை நிரப்பி கொண்டனர்.

அதன் பிறகு பெட்ரோல் போட்டதற்கான பணத்தை கேட்டபோது மோட்டார் சைக்கிளில் வந்தவ இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அருவாளை சபரியின் கழுத்தில் வைத்து மிரட்டியவாறு ஊழியரை கைகளால் பெட்டி தள்ளிக்கொண்டு பெட்ரோல் பங்க் அலுவலக அறையில் இருந்த பாக்யராஜ் வைத்திருந்த பணம் ரூ 7 ஆயிரம் மற்றும் விலையுயர்ந்த 2 செல்போன்களை பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

இதுகுறித்து பாக்யராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து விராலிமலை சுற்று பகுதிகளில் இயங்கி வரும் பெட்ரோல் பங்கை குறி வைத்து நள்ளிரவு நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற திருட்டு சம்பவத்தால் இரவு பணியில் இருக்கும் ஊழியர்கள் ஒரு வித அச்சத்துடன் பணியாற்றும் சூழல் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top