மிதுனம் செப்டம்பர் மாத ராசி பலன் 2022!

மிதுன ராசியினைப் பொறுத்தவரை அஷ்டமத்தில் சனி பகவான் இருக்கிறார். இராசி பகவான் புதன் 4 ஆம் இடத்தில் 10 ஆம் தேதி வக்கிரம் அடைகிறார். குரு பகவான் 10 ஆம் இடத்தில் வக்கிரம் அடைகிறார். 12 ஆம் இடத்தில் செவ்வாய் இருக்கிறார். ராகு- கேது 11 மற்றும் 5 ஆம் இடத்தில் இருக்கின்றனர்.

புதன் பார்வையில் குருவும் குரு பார்வையில் புதனும் இருப்பதால் வேலைவாய்ப்பு ரீதியாக திடீர் மாற்றங்கள் ஏற்படும். சனி பகவான் உங்கள் தொந்தரவுகள், பிரச்சினைகள் என அனைத்தையும் நிவர்த்தி செய்யும் பணியில் உள்ளார்.

அஷ்டமசனி கடைசி கட்டத்தில் இருப்பதால் இதுவரை இருந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வில் அடியெடுத்து வைப்பீர்கள்.

குடும்பப் பிரச்சினைகள், ஆரோக்கியம் ரீதியான பிரச்சினைகள், பணரீதியான பிரச்சினைகள், எதிர்காலம் குறித்த மன உளைச்சல்கள் அனைத்தையும் நீக்குவார் புதன் பகவான்.

பல தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள், வேலைவாய்ப்பு ரீதியாக புது முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கப் பெறும் மாதமாக இருக்கும். திருமணம் சார்ந்த காரியங்களுக்கு எதிர்பார்த்து இருப்போருக்கு வரன்கள் தள்ளிப் போகும் மாதமாக இருக்கும்.

செவ்வாய் பகவான் கோபத்தை ஏற்படுத்துவதால் குடும்பத்தில் கணவன் – மனைவி இடையேயான பிரச்சினைகள் அதிகரிக்கும். காதலிப்போர்களுக்கு தோல்வி ஏற்படுதல், காதலர்களுக்குள் மனக் கசப்பு போன்றவை ஏற்படும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.