மிதுனம் அக்டோபர் மாத ராசி பலன் 2022!

4 ஆம் இடத்தில் புதன் உச்சம், சுக்கிரன்- புதன் சேர்க்கை, சூர்யன்- சுக்கிரன் சேர்க்கை, குரு பார்வையில் புதன், புதன் பார்வையில் குரு என கோள்களின் இட அமைவு உள்ளது, சனி பகவான் 8 ஆம் இடத்தில் வக்கிர நிவர்த்தி அடைகிறார்.

செவ்வாய் 12 ஆம் தேதி வரை விரயச் செவ்வாயாக இருப்பார். வேலைவாய்ப்புரீதியாக பெரிய மாற்றங்கள் இருக்காது, புதிய முயற்சிகள் எடுக்கும்போது உடனடியாகப் பலன் இருக்காது.

வேலைச் சுமை, சக பணியாளர்களுடன் உறவு, உயர் அதிகாரிகளுடன் உறவு என வேலை சார்ந்த விஷயங்களில் ஏற்கனவே இருந்த பிரச்சினைகள் குறைந்து சிறப்பான மாற்றம் இருக்கும்.

திருமணம் சார்ந்த விஷயங்கள் மந்தநிலை காணப்படும், காதலர்கள் திருமணம் குறித்து வீட்டில் சொன்னதும் எதிர்ப்பு அதிகரிக்கும்.

குடும்பத்தில் பெரிய அளவில் பிரச்சினைகள் இருக்காது. கணவன்- மனைவி இடையேயான உறவு சுமாரானதாக இருக்கும். குடும்பத்தில் விரயச் செலவுகள் கண்டிப்பாக ஏற்படும். புதனின் உச்ச கட்டம் மாணவர்களின் கல்வி நலனில் புத்திசாலித்தனமாகச் செயல்படுவார்கள்.

உடல் நலனைப் பொறுத்தவரை 17 ஆம் தேதி வரை உடல் நலம் சிறப்பாகவே இருக்கும், ஆனால் 18 ஆம் தேதிக்குப் பின் உணவு சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.

கடந்த மாதங்களைவிட அக்டோபர் மாதம் மிதுன ராசி அன்பர்கள் ஓரளவு சிறப்பானதாகவே இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.