மிதுனம் மார்கழி மாத ராசி பலன் 2022!

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு எந்தவொரு காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சமூகத்தில் செல்வாக்கு உயரும். நல்ல பணவரவு, பொருள் வரவு இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வருகையில் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலைவாய்ப்புரீதியாக சிறப்பான முன்னேற்றம் இருக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியினைக் கொடுக்கும், தாயின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

வண்டி, வாகனங்களால் ஆதாயப் பலன்கள் ஏற்படும். கல்விரீதியாக மாணவர்கள் மிளிர்ந்து காணப்படுவார்கள். 5 ஆம் இடத்தில் கேது பகவான் இருப்பதால் கணவனுக்கும் மனைவி வீட்டாருக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்படும்.

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும், பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பூர்விகச் சொத்துகள்ரீதியான பிரச்சினைகள் பெரிதாகும். வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். கடன் தொல்லை படிப்படியாகக் குறையும்.

கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். திருமண காரியங்களுக்கு எதிர்பார்த்து இருப்போருக்கு எதிர்பார்த்த வரன் அமையப் பெறும். 8 ஆம் இடத்தில் சனி பகவான் உள்ளார், கையில் கிடைத்தது வாய்க்குக் கிடைக்காதது போல் உணர்வீர்கள்.

10 ஆம் இடத்தில் குரு பகவான் இருப்பதால் வேலைவாய்ப்புரீதியாக கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறும். ஆண்டாளை வழிபாடு செய்து வருதல் நல்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.