மிதுனம் டிசம்பர் மாத ராசி பலன் 2022!

டிசம்பர் மாதத்துடன் சனி பகவானின் தாக்கம் குறையும் மாதமாக இருக்கும். சூர்யன்-சுக்கிரன்-புதன் கோள்களின் பார்வை மிதுனராசியின்மீது விழுகின்றது. 12 ஆம் இடத்தில் செவ்வாய் பகவான் உள்ளார், 5 ஆம் இடத்தில் கேது பகவான் உள்ளார்.

குரு பகவான் 10 ஆம் இடத்தில் உள்ளார். எதிர்ப்பும் நன்மையும் நிறைந்த மாதமாக இருந்தாலும், நன்மை சிறிது கூடியே இருக்கும். இதுவரை இருந்த பிரச்சினைகள், தடைகள் என ஒவ்வொன்றாகக் குறையும். நிம்மதியில்லாத தன்மையினைக் குறைக்கும்.

கடன்களைக் குறைக்கும், ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளைக் குறைக்கும். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை நற்பலனை எதிர்பார்த்துத் தயாராக இருங்கள்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை டிசம்பர் மாதம் பொறுத்திருந்து ஜனவரி மாதத்தில் எந்தவொரு முடிவையும் எடுக்கலாம். மனதில் இருந்த கவலைகள், பாரங்கள் குறையும். தெளிவான மனநிலையுடன் இருப்பீர்கள்.

உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை சனி பகவான் பெரிதளவில் செயல்பாட்டில் இல்லை. இதனால் உடல் ஆரோக்கியம்ரீதியாக பிரச்சினைகள் எதுவும் இருக்காது.

அவசரம் காட்டுதலால் பிரச்சினைகள் ஏற்படும், உடன் பிறப்புகளுடன் வீண் சண்டை சச்சரவுகள் ஏற்படும். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை மிகவும் புத்துணர்ச்சி நிறைந்து காணப்படுவீர்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.