மிதுனம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022!

சுக்கிரன் மிதுனத்தின் மேல் வருவதால் சுக போக வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பீர்கள். ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரையிலான காலம் இதுவரை நீங்கள் கண்ட பிரச்சினைகளுக்கு விடிவுகாலமாக இருக்கும்.

புதன்- சூரியன் இணைவு எதிர்மறையான நிகழ்வுகள் எதையும் ஏற்படுத்தாது. சனி பகவான் எட்டாம் இடத்தில் இருப்பதால் உங்கள் வாழ்க்கையில் இருந்த மோசமான விஷயங்களை தகர்த்தெறியும்.

பெற்றோரின் உடல் நலன் ரீதியாக கூடுதல் கவனம் செலுத்துதல் அவசியம். மேலும் வண்டி, வாகனங்களில் பயணம் செய்வோர் கூடுதல் கவனமாக இருத்தல் வேண்டும்.

இரவு நேர பயணங்கள் மற்றும் வெளியூர்ப் பயணங்களை முடிந்தளவு தவிர்த்தல் நல்லது. வேலைவாய்ப்பு ரீதியாக பல மாற்றங்கள் வந்தாலும் ஆலோசனைகள் செய்து எந்தவொரு முடிவினையும் எடுத்தல் நல்லது.

மேலும் உயர் அதிகாரிகள், சக பணியாளர்களுடன் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. பொறுமையுடன் சிந்தித்து செயல்படுதல் வேண்டும். குடும்ப வாழ்க்கை செவ்வாய் 12 ஆம் இடத்திற்கு வருவதால் மறைமுகமான இடையூறுகள்/ பிரச்சினைகள் ஏற்படும்.

திருமண காரியங்களைச் செய்ய நினைப்போருக்கு தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். குடும்ப உறவுகளுக்குள் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு, வீண் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும்.

குழந்தைகள் உடல் நலனில் அக்கறை தேவை. சுக்கிரன்- சூர்யனுடன் இணைவதால் எந்தவொரு விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவு எடுக்காமல் பொறுமையாக யோசித்து முடிவு எடுத்தல் வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews