News
குறு,சிறு,நடுத்தரத் தொழில் நிறுவன நாள்!- முதல்வர் வாழ்த்து!
தற்போது நம் தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது திராவிட முன்னேற்ற கழகம். தமிழகத்தில் மு க ஸ்டாலின் முதன் முறையாக முதல்வராக உள்ளார் என்பது நடைமுறையில் உள்ளது இந்நிலையில் அவர் தேர்தலில் கூடிய அத்துணை வாக்குறுதியையும் வரிசையாக நிறைவேற்றி மக்களிடையே நம்பகத்தன்மையை உருவாக்கி வருகிறார் என்றே கூறலாம். மேலும் அவர் ஆட்சிக்கு வந்தவுடன் சில நாட்களிலேயே தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று உத்தரவிட்டார்.
அவை தற்போது வரை நடைமுறையில் உள்ளன ஆனால் தற்போது தமிழகத்தில் பல தொழில் நிறுவனங்கள் சந்தைகள் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளன. மேலும் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் தமிழகத்தில் பெரும்பாலான மக்களுக்கு வேலை இன்றி தவிக்கும் நிலை உருவானது. அவர்களுக்கு பிரயோஜனம் அளிக்கும் நிலையில் தமிழக அரசின் சார்பில் நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண நிதிகள் வழங்கப்பட்டன. மேலும் தமிழகத்தில் இரண்டு மாதங்களாக நியாய விலை கடையில் 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நம் தமிழகத்தில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவன நாளாக இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். குறு நடுத்தர தொழில் நிறுவன நாளான இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டு தொழில் நிறுவனங்களுடன் இணைந்து அரசு செயல்படும் என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
