எம்.ஜி.ஆருடன் ஆன தனது பழைய நினைவுகளை பகிர்ந்த பிரபல தயாரிப்பாளர்- இவர் யார் என்று தெரிகிறதா?
எண்பதுகளில் பாலு மகேந்திரா இயக்கிய மூன்றாம் பிறை திரைப்படம் மிகுந்த வெற்றியை பெற்றதுடன் மட்டுமல்லாமல் தேசிய விருதையும் இப்படம் வென்றது.
அதன் பிறகு 90களில் இதயம், 2019ல் விஸ்வாசம், 2021ல் அன்பறிவ் என இன்றுவரை மிக ஜொலிப்பான தயாரிப்பாளராக வலம் வருபவரே சத்யஜோதி தியாகராஜன்.
இவர் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவர் அவரது குடும்ப நண்பர் என்பதால் எம்.ஜி.ஆருடன் எடுத்த பழைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” என்ற வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் பொன்மனச் செம்மல் திரு. எம். ஜி. ஆர்.
நானும் எங்களது குடும்பமும் வாழ்க்கையில் அவருடன் பயணித்ததில் மிகுந்த பெருமை கொள்கிறோம் என சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் அவர்கள் தனது பதிவில் கூறி இருக்கிறார்.
இன்று எம்.ஜி..ஆரின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி தனது குடும்பத்தினருடன் எம்.ஜி.ஆருடன் சிறுவயதில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சத்யஜோதி தியாகராஜன்.
"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்" என்ற வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் பொன்மனச் செம்மல் திரு. எம். ஜி. ஆர். நானும் எங்களது குடும்பமும் வாழ்க்கையில் அவருடன் பயணித்ததில் மிகுந்த பெருமை கொள்கிறோம். #MGR pic.twitter.com/lCvXIDaQ3v
— TG Thyagarajan (@TGThyagarajan) January 16, 2022
