சட்டென கோபமாக வெளியேறிய எம்.ஜி.ஆர்.. பதறிப்போன ஏ.வி.எம். ஷுட்டிங்கில் நடந்த சம்பவம்!

அதுவரை வெகுஜன, புரட்சிப் படங்கள், காவியப் படங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர்., கொஞ்சம் வித்தியாசமாக ரொமான்ஸ், காதல், காமெடி என இறங்கி பொளந்து கட்டிய படம் தான் அன்பே வா. அதுவரை கத்திச் சண்டையிட்டும், துப்பாக்கி சண்டை போட்டும் நடித்து வந்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அவரது ரொமான்ஸ் நடிப்பில் மயங்கி அதனையும் ரசித்தனர்.

ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த அன்பே வா படத்தில் சரோஜாதேவியுடன் ரொமான்ஸ், நாகேஷ் உடன் காமெடி என பக்கா கமர்ஷியல் படத்தைக் கொடுத்திருப்பார் எம்.ஜி.ஆர். இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் இந்தப் பட ஷூட்டிங்கின் போது எம்.ஜி.ஆர் திடீரென வெளியேறிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருந்த இந்த படத்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையில் எம்.ஜி.ஆர் பாடுவது போன்று நாடோடி நாடோடி என்ற பாடல் இடம் பெற்றிருக்கும். இந்த பாடல் பதிவின் போது நடைபெற்ற ரிகர்சலில் எம்.ஜி.ஆர் திடீரென எம்.ஜி.ஆர் கோபப்பட்டதாக ஏவிஎம் குமரன் கூறியுள்ளார்.

ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் தேம்பி தேம்பி அழுத ஸ்வர்ணலதா.. வலிகளுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்

ஏவிஎம் ஸ்டூடியோவில் நாடோடி நாடோடி பாடல் ரிகர்சல் நடைபெற்று வந்தது. இதில் கலந்துகொண்ட எம்.ஜி.ஆர் ரிகர்சலை பார்த்துக்கொண்டே இருந்து திடீரென எழுந்து சென்று விட்டார். அவருடன் இருந்த நண்பர்களும் சில டிஸ்டிபியூட்டர்களும் எம்.ஜி.ஆர் பின்னாடியே சென்றுவிட்டனர். இதனால் உடனடியாக ஷுட்டிங் நின்று போனது. இயக்குனர் திருலோகசந்தர் உட்பட எங்கள் அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை.

அவரது மேனேஜரும் கூடவே சென்று விட்டார். மேக்கப் ரூமுக்கு சென்ற சின்னவர் மேனேஜரை மட்டும் கூப்பிட்டு, அவர் என்ன சொன்னாரே தெரியவில்லை. வெளியில் வந்த மேனேஜர் காரில் ஏறி வேகமாகக் கிளம்பிவிட்டார். சிறிது நேரம் கழித்து,  இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர் வாலி, ஆரூர் தாஸ் ஆகிய மூவரையும் அழைத்து வந்து அனைவரும் எம்.ஜி.ஆர் ரூமுக்கு சென்றுவிட்டனர்.

உள்ளே என்ன டிஸ்கஷன் நடந்ததோ தெரியவில்லை. ஆனால் சில நிமிடங்கள் கழித்து எம்.ஜி.ஆர் சிரித்துக்கொண்டே வெளியில் வந்தார். அதன்பிறகு மீண்டும் ரிகர்சல் நடந்தது. ஆனால் உள்ளே என்ன நடந்தது என்பது எங்கள் யாருக்கும் தெரியவில்லை. அதன்பிறகு ஆரூர் தாஸ் தனியாக வந்து சொன்னார். இந்த பாடலில் என்ன நாடோடி ஓடோடி என்று வருகிறது இந்த வரிகள் எனக்குச் சரியாக படவில்லை என்று எம்.ஜி.ஆர் கூறினாராம்.

அதற்கு முதலில் அப்படித்தான் சார் வரும் பின்  நீங்கள் பாட்டிலேயே பதிலடி கொடுப்பீர்கள் முதலில் இப்படி வந்தால் தான் நீங்கள் பதிலடி கொடுக்க சரியாக இருக்கும். அப்படித்தான் எழுதியிருக்கிறோம். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மாற்றிவிடுகிறேன் என்று வாலி சொன்னார். இல்லை மாற்ற வேண்டாம் எனக்கு சந்தேகம் இருந்தது அதை கேட்டுக்கொண்டேன். இதை மேற்கொண்டு பெரிது படுத்த வேண்டாம் என்று சொன்னதாக ஆரூர் தாஸ் சொன்னார் என ஏவிஎம் குமரன் கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.