கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் தரைப்பாலம் அமைக்கும் பணியின் போது எம்.ஜி.ஆர் சிலை கீழே விழுந்து சேதமடைந்ததால் அதிமுக தொண்டர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் உள்ள நெடுஞ்சாலையில் 15 நாட்களுக்கும் மேலாக தரைப்பாலம் கட்டும் பணி நடைப்பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்றைய தினத்திலும் பணியானது நடைப்பெற்று வருகிறது.
3-வது திருமணத்தால் விபரீதம்! தந்தை துடிக்க துடிக்க கொலை!!
இந்நிலையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சிலையானது இரும்பு கூண்டுடன் கீழே விழுந்து தரைமட்டமானது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிமுகவினர் எம்.ஜி.ஆர் சிலை கீழே விழுந்ததை கண்டித்தும் ஒப்பந்ததாரரை கண்டித்தும் சாலை மறியியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த சூழலில் அமமுக வட்டச்செயலாளர் அன்பழகன் என்பவர் சாலையில் உருண்டு கதறி அழுததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருதாச்சலம் போலீசார் மறியலில் ஈடுப்பட்ட அதிமுகவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.
கேரளாவில் பயங்கரம்… மந்தி பிரியாணி சாப்பிட்ட செவிலியர் உயிரிழப்பு!
மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஓபிஎஸ் தரப்பினரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.