Connect with us

எம்.ஜி.ஆரின் பேரன் நடிக்கும் படம் தடை விதிக்க கோரி வழக்கு

பொழுதுபோக்கு

எம்.ஜி.ஆரின் பேரன் நடிக்கும் படம் தடை விதிக்க கோரி வழக்கு

முன்னாள் முதல்வரும் புரட்சித்தலைவர் என மக்களால் விரும்பி இன்றளவும் அழைக்கப்படுபவர் எம்ஜிஆர்.

362e5873412222a5b79790bec7a9a084

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் மகனான ராமச்சந்திரன் “குறவன்” என்ற தலைப்பில் நடித்து வருகிறார்.

எம்.ஜி.ஆரின் பேரன் நடிக்கும் ‘குறவன்’ படத்திற்கு தடை கோரி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குறவர்கள் என தவறுதலாக அழைக்கப்பட்டு வரும் வட மாநிலங்களில் இருந்து குடி பெயர்ந்தவர்களை மையமாக வைத்து இந்த படத்தை தவறாக சித்தரித்துள்ளதாக குறவர் சங்கங்களின் கூட்டமைப்பை சார்ந்தவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

உண்மையில் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த தாங்கள் தான் குறவர்கள் என்றும், அரசாணையில் பழங்குடி இன மக்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளனர். இது போன்று படத்தில் குறவர்கள் எனக் கூறி மராத்தியில் இருந்து வந்த பழங்குடியினரை சித்தரிப்பதால் தங்கள் சமூக மக்களுக்கு முறையான பலன்கள் தடைபடுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே இந்த படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் எனவும், இல்லையெனில் தடைவிதிக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top