ஜெமினி கணேசன் கூட இனி நடிக்கமாட்டேன்.. சூப்பர் ஹிட் படத்திற்கு பின் எம்ஜிஆர் எடுத்த முடிவு..

தமிழ் சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் குமார், விக்ரம், சூர்யா உள்ளிட்டோரின் படங்கள் வரும் போது எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே போல ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை கட்டி ஆண்டவர்கள் தான் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் மற்றும் ஜெமினி கணேசன்.

இதில் எம்ஜிஆர் படங்களை பொறுத்தவரையில் மக்களுக்காக போராடுவது போன்று கமர்சியல் கலந்த வகையில் இருக்கும். இதனால், வெகுஜன மக்கள் எம்ஜிஆரின் படங்கள் என்றாலே திரையரங்கை நோக்கி படை எடுக்கத் தொடங்கினர். அது மட்டுமில்லாமல், சினிமாவில் கிடைத்த வெற்றியால் தமிழகத்தின் முதல் அமைச்சராகவும் மக்கள் ஆதரவுடன் ஆட்சி புரிந்திருந்தார் எம்ஜிஆர்.

இதே போல, நடிகர் திலகம் என அறியப்படும் சிவாஜி கணேசன், அவரது நடிப்பின் மூலம் புதிய பரிமாணத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கி இருந்தார். வெறுமென நடிகர்கள் காட்சிகளை வசனத்துடன் பேசி கடந்து செல்ல, அதில் வசனத்துக்கு வசனம் நடிப்பை அள்ளி தெளித்து பலரையும் வெகுவாக கவர்ந்திருந்த சிவாஜி கணேசன், ஏறக்குறைய ஐந்து, ஆறு தலைமுறைகள் பல இளம் நடிகர்களுடனும் இணைந்து நடித்திருந்தார்.

இவர்கள் இரண்டு பேரில் இருந்து வித்தியாசமான ரூட்டை எடுத்திருந்தவர் தான் ஜெமினி கணேசன். காதல் மன்னன் என சினிமாவில் பெயர் எடுத்த ஜெமினி கணேசன் மீது காதல் வசம் கொள்ளாத பெண்களே இருக்கமாட்டார்கள். சினிமா மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் நிறைய நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட ஜெமினி கணேசனும் கூட தனது வயதான காலத்திலும் மற்ற தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்தார்.

இப்படி ஒரு காலத்தில் இந்த மூன்று நடிகர்களும் கட்டி ஆண்டு கொண்டிருந்த நிலையில், ஜெமினி கணேசனுடன் ஒரு கட்டத்திற்கு பிறகு எம்ஜிஆர் நடிக்க மறுத்ததற்கான காரணம் பற்றி தற்போது பார்க்கலாம். எம்ஜிஆர் திரைப்படங்களில் நடித்து வந்த போது ஒரு முக்கியமான விஷயத்தை கடைபிடித்து வந்தார். அதாவது தனது படத்தில் தன்னுடன் இணைந்து நடிக்கும் நடிகர்களோ அல்லது தான் பிரபலமாக இருக்கும் காலத்தில் மற்ற நடிகர்களோ தனக்கு இணையாக பெயர் எடுத்து விட்டால், அவருடன் இணைந்து நடிக்கமாட்டார் என்பது தான்.

அந்த வகையில், கடந்த 1966 ஆம் ஆண்டு எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் ஜெமினி கணேசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘முகராசி’. இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற, எம்ஜிஆருக்கு இணையாக ஜெமினி கணேசன் நடிப்பிற்கு பாராட்டுக்கள் கிடைத்துள்ளது. இந்த ஒரே ஒரு காரணத்துக்காக ஜெமினி கணேசனுடன் இணைந்து நடிப்பதையே நிறுத்தி விட்டாராம் எம்ஜிஆர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...