எம்.ஜி.ஆர் உட்கார்ந்த நாற்காலியில் உட்கார்ந்து சசிகலா ஆலோசனை!
அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.,ஆர் அவர்களின் 105வது பிறந்த நாள் விழா நேற்று நடந்தது.
இதில் சென்னை தி நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் சசிகலா ஆதரவாளர்களும் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை கொண்டாடினர்.
பின்னர் எம்.ஜி.ஆர் அறைக்கு சசிகலாவை அவரது ஆதரவாளர்கள் அழைத்து சென்றனர் எம்.ஜி.ஆர் அமர்ந்த நாற்காலியில் சசிகலாவை அமர வைத்தனர்.
பின்னர் அந்த நாற்காலியில் உட்கார்ந்த சசிகலா சில நிமிடங்கள் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய சசிகலா நான் தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டேன். கொரோனா காரணத்தால் செல்லவில்லை.
வரும் 21ம் தேதிக்கு பிறகு நல்ல செய்தி வரும் என சொல்லி சென்றுள்ளார்.
