மதுவைத் தொடாமல் நடித்த எம்.ஜி.ஆர்., இருந்தும் ஒரு பாடலில் நடித்ததற்கு காரணம் இதானா?

இன்று திரைப்படங்களில் காட்சிக்குக் காட்சி மது அருந்தும் பழக்கத்தையும், சிகரெட் குடிக்கும் பழக்கத்தையும் ஊக்குவிக்கும் திரைப்படங்கள் வருவது கனிசமாகிவிட்டது. ஒரே ஒரு குடிப்பழக்கம் உடலுக்குத் தீமை விளைவிக்கும் என்ற கார்டை மட்டும் கீழே சிறியதாகப் போட்டு மது அருந்துவது போல் காட்சிகளை எடுத்து இளைஞர்களை கெடுக்கும் சினிமாக்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. உச்ச நடிகர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

இருப்பினும் சில நடிகர்கள் தான் நடிக்கும் படங்களில் மது, போதை, சிகெரட் உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்து அதன்படியே நடித்து வருவது பாராட்டுக்குரியது. இந்தப் பாராட்டுக்கும், பெருமைக்கும் அடித்தளமிட்டவர் யார் என்றால் நமது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான்.

தான் நடிக்கும் படங்களில் மது, சிகரெட், போதை மருந்துகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தாமல் நடித்து பெயர் எடுத்தவர். திரைப்படங்களில் அவர் எத்தனையோ சாதனைகள் புரிந்திருந்தாலும் அவர் மது அருந்தும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என சபதம் எடுத்தது நடித்தது வெகு பாராட்டுக்குரியது.

“நான் பேச நினைப்பதெல்லாம்..” அக்கா தங்கை பாடலை காதல் பாட்டாக்கிய கவியரசர் கண்ணதாசன்

அப்படிப்பட்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒரே ஒரு படத்தில் ஒரு பாடல் காட்சியில் மது அருந்தி தள்ளாடுவது போல் நடித்திருப்பார். எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா, சௌகார் ஜானகி நடிப்பில் 1968-ல் வெளிவந்த படம் தான் ஒளிவிளக்கு. இப்படத்தினை தயாரித்தவர் எஸ்.எஸ்.வாசன், இயக்கியவர் சாணக்யா. இந்தத் திரைப்படத்தில் வரும் ஒரு தத்துப் பாடல்தான் தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா? என்ற பாடல். இந்தப் பாடலில் எம்.ஜி.ஆர் கையில் மது பாட்டிலுடன் போதையில் இருக்கும் ஒருவரைப் போல் நடித்திருப்பார்.

இதனை அவரின் மனசாட்சி கண்டிப்பது போல் இந்தப் பாடலைப் படமாக்கியிருப்பார்கள். இந்தப் பாடலில்  மதுவின் தீமையை உணர்த்துவதற்காக எம்.ஜி.ஆர் கையில் மது பாட்டிலுடன் நடித்திருப்பார். மேலும் இந்தப் பாடலில் வரும் வரிகளான

இந்த மதுவில் விழும் நேரம்                                                                                                    மனமும் நல்ல குணமும்                                                                                                       உன் நினைவை விட்டுவிலகும்                                                                                           நீ தான் ஒரு மிருகம்                                                                                                             இந்த மதுவில் விழும் நேரம்

போன்ற வரிகள் மதுவின் தீமையைக் குறிப்பதாகவே அமைந்திருக்கும். மேலும் பாடல் முழுக்க மதுவினால் ஏற்படும் தீமையைக் குறிப்பதாகவே இருக்கும். எனவே மது குடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதைத் அறவே தவிர்த்த எம்.ஜி.ஆர்., குடியால் நிகழும் தீமைகளை உணர்த்துவதற்காகவே இந்தப் பாடலில் மது அருந்தியது போன்று நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.