வாலுடன் பிறந்த பெண் குழந்தை: ஆச்சரியத்தில் மருத்துவர்கள்!!

வளர்ந்து வரும் நவீன காலக்கட்டத்திற்கு மத்தியில் உலகின் ஆங்காங்கே ஒரு சில அதிசய நிகழ்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக அமைகிறது. அந்த வகையில் பிறந்த பெண்குழந்தைக்கு துளிர் முடிகளுடன் வால் இருப்பது மருத்துவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வடகிழக்கு மெக்ஸிகோ பகுதியில் பெண்மணி ஒருவர் கர்ப்பமாக இருக்கும் போது எவ்வித கதிர்வீச்சு அபாயம் மற்றும் பிரச்சனைகள் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையா?- சுகாதார இயக்ககம் விளக்கம்!

இதற்கிடையில் அப்பெண்மணிக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் குழந்தையின் பின்புறத்தில் வால் போன்ற பகுதி கிட்டத்தட்ட 5.7-சென்டிமீட்டர் நீளத்திற்கு வளர்ந்து இருந்தது. இதனை பார்த்த மருத்துவர்கள் இது ஒரு அரிதான நிகழ்வு என்று தெரிவித்தனர்.

இதனிடையே 2 மாதங்கள் ஆன பிறகு குழந்தையில் வால் பகுதி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. பின்னர் அளவிட்டதில் 2 மாதத்தில் 0.8 செ.மீட்டர் அளிவிற்கு வால் முளைத்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

கார்த்திகை மாதம் எதிரொலி: காசிமேட்டில் மீன்களின் விலை குறைவு!!

இது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில் “ ஒவ்வொரு தாயும் கறுவுற்று இருக்கும் போது சிசுவில் வால் முளைக்கும் என்றும் குழந்தை வளரும் போது உடலில் உறிஞ்சப்பட்டு எலும்புகளாக மாறும்” என தெரிவித்துள்ளனர். ஆனால் இத்தைய குழந்தைக்கு இது போன்ற நிகழ்வு நடைப்பெறவில்லை என கூறியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.