Connect with us

வரும் தண்ணீரை அப்படியே வெளியேற்றும் மேட்டூர் அணை!! என்ன காரணம்?

மேட்டூர் அணை

தமிழகம்

வரும் தண்ணீரை அப்படியே வெளியேற்றும் மேட்டூர் அணை!! என்ன காரணம்?

தமிழ்நாட்டில் முதல் முறையாக சுதந்திரத்திற்கு பின் மே மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது நடப்பாண்டில் தான். ஏனென்றால் மேட்டூர் அணைக்கு நாள் தோறும் வரும் நீர் வரத்தானது அதிகமாகவே காணப்படுகிறது.

இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மேலும் கரையோர மக்களுக்கு தண்டோராமலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் எந்த மாற்றமும் இன்று வெளியேற்றப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. முதலில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1.45 லட்சம் கன அடியில் இருந்து 1.15 லட்சம் கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் 1.15 லட்சம் கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்மின் நிலையங்கள் வழியாக 23 ஆயிரம் கன அடி தண்ணீரும் 16 கண் மதகுகள் வழியாக 92 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top