
தமிழகம்
கனமழை எதிரோலி: மேட்டூர் அணையின் நீர் வரத்து அதிகரிப்பு!!
கர்நாடக அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரானது மேட்டூர் அணைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சேலம் மாவட்ட மக்களின் குடிநீராகவும் விவசாயிகளுக்கு முக்கிய ஆதாரமாகவும் விளங்குவது மேட்டூர் அணை ஆகும். இந்நிலையில் 2 ஆயிரத்து 141-கன அடியாக இருந்த நீர்வரத்தானது தற்போது 3 ஆயிரத்து 141 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனிடையே தொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரானது அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமானது 68 ஆண்டாக இன்னும் ஒரு சில தினங்களில் 100 அடியை எட்டவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதே போல் காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டமானது 98 அடியாக உள்ளது.
இதனால் அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடிநீர் பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டுள்ளது.மேலும், மேட்டூர் அணையின் நீர் வரத்தை நம்பி விவசாயம் செய்த விவசாயிகள் இத்தகைய தகவலால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
