நம் தமிழகத்தில் உள்ள பல டெல்டா மாவட்டங்களுக்கு நீராதாரமாக காணப்படுகிறது காவிரி நீர். திருச்சி,ஈரோடு, சேலம், தர்மபுரி இவ்வாறு பல மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் காணப்படுகிறது.
இந்த காவிரி நீர் கர்நாடக மாநிலத்தில் குடகு மலையிலிருந்து உருவாகிறது. இதனால் பெரும்பாலான நேரங்களில் கர்நாடக அரசு குறைந்த அளவு நீரையே தமிழகத்திற்கு திறந்து விடும். இந்த நிலையில் தமிழகத்துக்கு காவிரி நீர் வரத்து 48 ஆயிரம் கன அடியாக உயர்ந்து காணப்பட்டது.
அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிலுள்ள காவேரி நீர் வரத்து 48000 கனஅடியாக உயர்ந்துள்ளது. முன்னதாக 30,000 காவிரியில் திறந்து விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை மற்றும் கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு நீர்வரத்து மிக உயர்ந்து காணப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சற்று அதிகமாக உள்ளதாக காணப்படுகிறது.
அதன்படி மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 34 ஆயிரம் அடியில் இருந்து 40 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்உபரி வெளியேற்றப்படுகிறது.