முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை: விவசாயிகள் மகிழ்ச்சி..!!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

மாண்டஸ் புயலின் எதிரொலியாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து ஆனது கிடுகிடுவென அதிகரித்து காணப்படுகிறது.

இடஒதுக்கீட்டு மனு- உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை!!

இன்று காலை 8 மணி நிலவரப்படி 11 ஆயிரத்து 60 கன அடியாக இருந்த தண்ணீர் வரத்து 10 மணியளவில் 21 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பிணை கருத்தில் கொண்டு அணைக்கு வரும் நீர் அப்படியே முழுவதுமாக வெளியேற்றப்படுகிறது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதே போன்று ஒக்கேனக்கல் அணைக்கும் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக தேன்கனி கோட்டை, நாற்றம் பாளையம், ராசி மணல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. தற்போது ஒக்கேனக்கலுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது.

கர்நாடகாவில் அதிர்ச்சி!! தந்தையை கொன்று 30 துண்டுகளாக வெட்டி வீசிய மகன்..!!!

இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினி ஃபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்பறித்து கொண்டுகிறது. மேலும், காவேரி நீர்வரத்தின் அளவை பிலிகுண்டுவில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.