Connect with us

முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!!

metturdam 1653103327

தமிழகம்

முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு தற்போது சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. அதே சமயம் 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணை நீர்மட்டமானது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இதனால்கால்வாய் பகுதிகளில் வசிக்கக்கூடிய பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதேசமயம் காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும், அணையின் பாதுகாப்பு கருதி தற்போது காவேரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top