பயணிகளின் கவனத்திற்கு; ‘மெட்ரோ ரயில்’… நாளை முதல் காலை 5 முதல் இரவு 11 மணிவரை மெட்ரோ…..!!
தலைநகர் சென்னையில் அதிவிரைவாக மெட்ரோ ரயில் காணப்படுகிறது. இந்த மெட்ரோ ரயில் நாளை காலை 5 மணிக்கு இயக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி நாளை முதல் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வாரநாட்களில் நெரிசல் மிகுந்த நேரங்களில் ஐந்து நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வார இறுதி நாட்கள் மற்றும் அரசு பொது விடுமுறைகளில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் நலன் கருதி நாளை முதல் அரை மணி நேரம் முன்னதாக மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அனைத்து நாட்களிலும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
