கோவையில் மெட்ரோ ரயில் சேவை-மத்திய அரசு நிதி ஒதுக்க கோரிக்கை!

தற்போது நம் இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் மட்டும்தான் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. அந்த மட்டும் தமிழகத்தில் தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. இந்த நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க உள்ளதாகவும் இந்த திட்டத்தை தொடங்க நிதி ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை தொடங்க மத்திய அரசுக்கு திமுக மாநிலங்களவை எம்பி ராஜேஷ்குமார் கோரிக்கை வைத்துள்ளார். கோவையில் மெட்ரோ ரயில் பணிகளை தொடங்க மத்திய அரசு விரைவாக நிதி ஒதுக்க வேண்டும் என்றும் திமுக எம்பி ராஜேஷ்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக தமிழக அரசு ஏற்கனவே 6670 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது என்றும் திமுக எம்பி ராஜேஷ் குமார் கூறினார். இதனால் கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க மத்திய அரசு விரைவில் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் எம்பி ராஜேஷ் குமார் கூறினார்.

மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் ஆகிய இரண்டாம் கட்ட நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் ராஜேஷ் குமார் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment