Connect with us

“மெட்ரோ ரயில் பயணிகளின் கவனத்திற்கு”- அடையாறு ஆற்றின் கீழ் மெட்ரோ ரயில் ஓடும்!!!

மெட்ரோ

தமிழகம்

“மெட்ரோ ரயில் பயணிகளின் கவனத்திற்கு”- அடையாறு ஆற்றின் கீழ் மெட்ரோ ரயில் ஓடும்!!!

வருகின்ற 2026-க்குள் இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் பணிகளை முடிக்க மெட்ரோ நிர்வாகம் முடிவெடுத்துவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டருக்கு தற்போது மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனர்.

தொடர்ந்து இரண்டாவது கட்டமாக ரூ.61 ஆயிரத்து 843 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை மற்றும் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

அந்த வகையில் அடையாறு ஆற்றில் 6 மீட்டர் அளவில் தண்ணீர் இருப்பதால் அதற்கு கீழ் ஆற்றில் 40 மீட்டர் ஆழத்திற்கு துளைகள் போடப்பட்டு மண் பரிசோதனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் மெட்ரோ ரயில் இயக்கவுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. அதோடு 2026-க்குள் இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் பணிகளை முடிக்க மெட்ரோ நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top