யூடியூபை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு வழிமுறைகள் தேவை!

நாம் எதை நினைத்தாலும் அதனை நாம் இணையத்தில் பெற்றுக் கொள்ளும் அளவிற்கு டெக்னாலஜி அதிக அளவில் முன்னேறியுள்ளது. அவற்றினை வீடியோ வாயிலாக பார்க்கும் அளவிற்கு கூட வளர்ச்சி பெற்றுள்ளது.

அதற்கு மிகவும் பயன்படுவது யூடியூப் தான். இந்த யூடியூப் இன் மூலமாக பலரும் நல்லதொரு சேவைகளை பெற்றுக் கொண்டு வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் படிப்புகள், சமையல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பலவற்றிற்கு யூடியுப் தளம் மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது.

இருப்பினும் சிலர் தவறான முறைக்கு பயன்படுத்துகின்றனர். இதனை தடுத்து நிறுத்தும் வகையில் உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி யூடியூப்பை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு வழிமுறைகள் தேவை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.

இந்தியாவில் பல லட்சம் பேருக்கு யூடியூப் வேலை வழங்கி உள்ளதாக தற்போது செய்தி வெளியாகி உள்ளது என்றும் உயர்நீதிமன்ற கிளை நீதிபதி புகழேந்தி கூறினார். யூடியுப் மூலம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதனை பலர் தவறாக உபயோகப்படுத்தி வருகின்றனர் என்றும் நீதிபதி கூறினார்.

நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமனம் செய்த வழக்கறிஞர் யூடியூப் குறித்த விவரங்களை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கு மார்ச் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment