Connect with us

3 மணி நேரத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

mumbai rain 33

News

3 மணி நேரத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

3 மணி நேரத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இன்னும் 3 மணி நேரத்தில் மூன்று மாவட்டங்களில் மிக கன மழை கொட்ட போகிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னைக்கு அருகிலுள்ள காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து பெரும்பாலானோர் இந்த மூன்று மாவட்டங்களில் சென்றுதான் அலுவலங்களில் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சரியாக அலுவலகம் முடியும் நேரத்தில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் முன்ஜாக்கிரதை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது

திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top