Connect with us

மெஸ்ஸி திடீர் விலகல்: ரசிகர்கள் அதிர்ச்சி!

Sports

மெஸ்ஸி திடீர் விலகல்: ரசிகர்கள் அதிர்ச்சி!

e4e06430c3840f0ae0a39e74f268e471-1

உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி பார்சிலோனா அணியில் இருந்து விலகி விட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 21 ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக அர்ஜென்டினாவை சேர்ந்த மெஸ்ஸி விளையாடி வந்தனர் என்பதும் அந்த அணிக்காக அவர் பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் மெஸ்ஸியின் கோல்கள் மிக அபாரமாக இருந்ததாக விமர்சனம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பார்சிலோனா அணியில் மெர்சி தொடரவில்லை என்றும் அவரது ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை என்றும் பார்சிலோனா அணியின் நிர்வாகம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. பார்சிலோனா அணியில் உள்ள நிதி நெருக்கடி மற்றும் சில கட்டுப்பாடுகள் காரணமாக மெஸ்ஸி தொடர முடியவில்லை என்று அந்த அணியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து பார்சிலோனா அணியில் இருந்து மெஸ்ஸி வெளியேறுகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மெஸ்ஸி தனது சொந்த நாடான அர்ஜென்டீனா நாட்டிற்காக இனி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top