Connect with us

விவசாய சங்க தேர்தல்: ரகசிய வாக்கெடுப்பில் குளறுபடி!! அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை;

simple

Tamil Nadu

விவசாய சங்க தேர்தல்: ரகசிய வாக்கெடுப்பில் குளறுபடி!! அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை;

இந்தியாவில் தற்போது ஏராளமான சங்கங்கள் உருவாகியுள்ளன. அந்த சங்கங்களுக்கு அடுத்தடுத்த தேர்தல்களும் நடைபெறுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் விவசாய சங்க தேர்தல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி தாராபுரம் விவசாயிகள் சங்க தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. பாஜகவின் திருப்பூர் நிர்வாகி சுகுமார் தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தி மனுக்களை நிராகரித்து, நிர்வாகக்குழு தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டை வைத்தார். எந்த ஒரு காரணமும் தெரிவிக்காமல் நிர்வாகக் குழுவினுடைய தலைவர்கள், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தேர்தல் நடைமுறையை முறையாக பின்பற்றாமல் தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரியும், ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top