பொதுத் தேர்வு அட்டவணையில் குழறுபடி !! அப்ப தேர்ச்சி….

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் தொழிற்கல்வி பாடம் இடம் பெற்றுள்ள நிலையில் தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி கட்டாயமா இல்லையா என்பதில் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

நேற்று தமிழகமெங்கும் 10 வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது. அதில் வரும் 21 ஆம் தேதி தொழிற்கல்வி பாடத்திற்கான தேர்வு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் 10 வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு விருப்பப்பாடம் என்ற தேர்வு முறையே நடைமுறையில் இருந்து வந்தது.

இந்த நிலையில் புதிதாக பொதுத்தேர்வு அட்டவணையில் புதிய கல்வி கொள்கையை பின்பற்றி தற்போது தொழிற்கல்வி பாடம் இடம்பெற்று இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் இல்லை என கூறப்பட்டாலும் அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment