மேஷம் தை மாத ராசி பலன் 2023!

மேஷ ராசியினைப் பொறுத்தவரை பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். நம்பிக்கையுடன் செயல்பட்டு நினைத்த காரியத்தை முடிப்பீர்கள். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன் – மனைவி இடையேயான பிரச்சினைகள் குறைந்து அன்பு அதிகரித்துக் காணப்படுவர்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை பதவி உயர்வு, பாராட்டு என நீங்கள் மகிழ்ச்சி கொள்ளும் வகையிலான விஷயங்கள் நடந்தேறும். புதிய வேலைவாய்ப்புக்கு முயற்சிப்போருக்கு எதிர்பார்த்த வேலைகள் கிடைக்கும்.

சூர்யன் 10 ஆம் இடத்தில் இருப்பதால் அரசு வேலை பார்ப்போருக்கு உகந்த காலகட்டமாக இருக்கும். கடந்த காலங்களில் நீங்கள் பட்ட வேதனைகளுக்கு விடிவு கிடைக்கும் மாதமாக தை மாதம் இருக்கும்.

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை குடும்பத்தில் உங்களின் நன்மதிப்பு அதிகரிக்கும். மாணவர்களைப் பொறுத்தவரை குழந்தைகள் கல்விரீதியாக மேம்பட்டுக் காணப்படுவார்கள். மேலும் குழந்தைகள் உங்களுக்குப் பெருமை தேடிக் கொடுப்பர்.

தொழில்துறை ரீதியாக இருந்த மந்தநிலை சரியாகும், புதிதாக தொழில் துவங்க ஏற்ற காலமாக தை மாதம் இருக்கும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை காரியங்கள் விறுவிறுவென நடந்தேறும்.

உடல் ஆரோக்கியம்ரீதியாக அக்கறை தேவை. வெளியூர்ப் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும் மாதமாக இருக்கும். விரய குரு ஆதாயப் பலன்களை பல வழிகளிலும் கொடுப்பார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews