மேஷம்: சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்!

மேஷம் சுபகிருது வருட பலன்கள்

எந்தவொரு விஷயத்தையும் வைராக்கியமாக செய்து முடிப்பீர்கள். செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் நன்மையை விளைவிக்கும். பிடிவாதமாகவும் துடிப்புடனும் நீங்கள் நினைத்த விஷயங்களை இந்த ஆண்டு செய்து முடிப்பீர்கள்.

பல ஆண்டுகள் கை கூடாத விஷயங்களும் இந்த ஆண்டு கைகூடும். அடுத்தவர்களுக்கு உதவி செய்து சிக்கலில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. அதனால் கொஞ்சம் கூடுதல் கவனமாகச் செயல்படுதல் அவசியம்.

அதேபோல் உடல் நலனில் இந்த ஆண்டு சில செலவுகளை சந்திக்க வாய்ப்புண்டு. அதனால் உடல் நலன் ரீதியாவும் மிக எச்சரிக்கையாகச் செயல்படுதல் வேண்டும்.

கிரகங்களின் சஞ்சாரம் சரிவர இல்லாத காரணத்தால் பணத்தினை பிறருக்குக் கொடுத்தால் பஞ்சாயத்தில் முடிய வாய்ப்புண்டு. குடும்ப உறுப்பினர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் இருப்பர். பல ஆண்டுகளாக இருந்த பூர்விக சொத்துப் பிரச்சினைகள் சுமுகமான முடிவுக்கு வரும்.

அம்மா, அப்பாவின் உடல் நலனில் இருந்த பிரச்சினைகள் சரியாகும். அதுபோக பெற்றோருடன் இருந்த மனரீதியான பிரச்சினைகளும் சரியாகி குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

இடம் விட்டு இடம் பெயர்ந்து வாழ்வதற்கான சாத்தியங்களும் அதிகம். வண்டி, வாகனங்கள் ரீதியாக அதிக செலவுகள் ஏற்பட உண்டு. குல தெய்வக் கோவிலுக்கு அமாவாசை நாட்களில் சென்றுவருவது குடும்பத்திற்கு நன்மை பயக்கும்.

குழந்தைகளின் படிப்பி விஷயத்தில் மந்தநிலை ஏற்படும். பணவிரயத்தைக் குறைக்க சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும். வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்துவீர்கள்.

திருமணமான புதுமணத் தம்பதிகளுக்கு பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.   மேலும் புதிதாக திருமணம் செய்பவர்கள் நன்கு விசாரித்து திருமணம் செய்வது நல்லது. பணி ரீதியாக உயர் பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.