மேஷம் செப்டம்பர் மாத ராசி பலன் 2018!

அன்புள்ள மேஷம் ராசியினர்களே, இந்த செப்டம்பர் மாதம் உங்களுக்கு திடீர் மாற்றங்களும், ஏற்றங்களும் நிறைந்த மாதமாக இருக்கும். உங்களது பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியான சூரியன் சொந்த வீட்டில் ஐந்தாம் இடத்தில் இருப்பதால் தொட்டது துலங்கும். சிம்ம ராசியில் இருக்கும் சூரியன் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். மாத தொடக்கத்தில் சிறிது தடைகள் இருப்பது போல தோன்றினாலும், தடைகள் விலகி, நினைத்த காரியம் கைக்கூடும்.

உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் நிலையான வருமானம் வரக்கூடும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை அமையக்கூடும். உங்கள் ராசிக்கு 10,11 அதிபதியான சனி பகவான் வக்ர நிவர்த்தியாவதால் தொழிலில் மிக பெரிய மாற்றத்தைக் கொடுப்பார்.

குருவின் பார்வை பலமாக இருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலை கொடுப்பார். உங்கள் முயற்சிக்கு ஏற்ற வளர்ச்சியைக் கொடுப்பார். பஞ்சம ஸ்தானத்தில் சூரியன் உச்சமாக இருப்பதால் உங்களது பிள்ளைகளின் மீது அக்கறை காட்டுவீர்கள். மகளுக்கு அல்லது மகனுக்கு தள்ளி போன திருமண பேச்சுவார்த்தை நல்ல விதமாக முடிவடையும்.

சுக்கிரன் சொந்த வீடான துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் தனலாபம் உண்டாகும். உபரி வருமானம் வரக்கூடும். குரு-சுக்கிரன் இணைந்து இருப்பதால் திடீர் யோகத்தைக் கொடுப்பர். செப்டம்பர் 6-ம் தேதி செவ்வாய் வக்ர நிவர்த்தியாவதால் ஆரோக்கியம் சீராகும். வியாபாரம் விருத்தியாகும்.

சிம்மத்தில் இருக்கும் புதன் சூரியனோடு இணைந்து இருப்பதால் பூர்விக சொத்து பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரக்கூடும். சகோதர, சகோதிரியிடம் இருந்து வந்த மனக்கசப்பு அகலும். செப்டம்பர் 15-ம் தேதி கன்னி ராசிக்கு புதன் சஞ்சரிக்கும் பொழுது உத்யோகத்தில் மாற்றங்கள் நிகழும். சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய சம்பள உயர்வு, புதிய பொறுப்புகள் தேடி வரக்கூடும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment