குருப்பெயர்ச்சி பலன்கள்- மேஷம்- ரிஷபம்

பலன்கள் எழுதியவர்

ஜோதிட ஆசிரியர் வீர முனி சுவாமிகள்

9629439499

ராஜபாளையம்

மேச ராசி :-

எதிலும் முதலிடம் வகிக்கும் மேஷ ராசி நேயர்களே !

இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு எல்லாவிதமான நன்மைகளையும் வாரி வழங்க இருக்கிறது. இதுவரை இருந்துவந்த மனக்கவலைகள் படிப்படியாக உங்களை விட்டு நீங்கி விடும். பணப்புழக்கம் படிப்படியாக அதிகரிக்கும் உங்களுடைய திறமையும் செல்வாக்கும் அதிகரிக்கும் .இந்த குரு பெயர்ச்சியால் யில் இருந்து அடுத்த நான்கு ஆண்டுகள் வரை குரு பகவான் நன்மைகளை வாரி வழங்கும் நிலையில் இருக்கிறார் .உங்களது நீண்ட கால கடன் களை முழுமையாக தீர்க்கும்/அடைக்கும் அளவுக்கு செல்வ வளத்தை குரு பகவான் வழங்க இருக்கிறார்.

பரிகாரம்:- வியாழக்கிழமை வரும் நாட்களில் ஒரு துறவி அல்லது வறியவருக்கு அன்னதானம் செய்து வாருங்கள். அல்லது தினமும் ஒரு மணி நேரம் வரை நற்பவி என்று எழுதி வாருங்கள் .எழுத இயலாதவர்கள் ஒரு மணி நேரம் வரை நற்பவி என்ற மந்திரத்தை ஜெபம் செய்து வர வேண்டும்.

ரிஷப ராசி:

அன்பான ரிஷப ராசி அன்பர்களே!

உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி வேலை அல்லது தொழில் மாற்றத்தை தர இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் பட்ட கஷ்டங்கள் இந்த குருப் பெயர்ச்சிக்குப் பிறகு நீங்கிவிடும். நீங்கள் இந்த குருப் பெயர்ச்சி முதல் சேமிக்க ஆரம்பிக்கலாம். குரு பகவான் ஒரு ராசியை கடக்க ஒரு வருடம் ஆகும்.இந்த முறை மட்டும் வெறும் 5 மாதங்களில் அடுத்த ராசியாக மீனா ராசிக்கு பெயர்ச்சி ஆகி விடுவார்.

பரிகாரம்:- தினமும் 108 முறை ஓம் ஹ்ரீம் பம் கபால பைரவாய நமக என்று ஜெபித்து அல்லது எழுதி வர வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews