மேஷம் புரட்டாசி மாத ராசி பலன் 2022!

செவ்வாய் பகவான் முதல் மூன்று வாரம் ரிஷபத்திலும், கடைசி வாரம் மிதுனத்திலும் சஞ்சாரம் செய்யவுள்ளார். 10 ஆம் இடத்தில் சனி பகவான் ஆட்சி பீடத்தில் உள்ளார்.

ராசியில் ராகு பகவான் இருப்பதால் சிந்தனை, செயல்பாடு போன்றவற்றில் குழப்பம் நீடிக்கும். தொழில், கல்வி, வேலைவாய்ப்பு ரீதியாக வெளிநாடு செல்ல நினைப்போருக்கு ஏற்ற கால கட்டமாக இருக்கும்.

செவ்வாயின் ஆதிக்கம் இருப்பதால் தொழில் செய்வோருக்கு லாபம் கொழிக்கும் காலகட்டமாக இருக்கும். பணவரவு, பொருள் வரவு எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும்.

புரட்டாசி மாதத்தில் எடுக்கும் முயற்சிகள் வெற்றியினைக் கொடுக்கும். குரு பார்வையால் தாய் வழி உறவினர்கள் உதவிகள் கிடைக்கப் பெறும். வண்டி, வாகனங்கள் வாங்குவதற்கான சூழ்நிலைகள் அமையும். வீடு, மனை வாங்க நினைக்கும் உங்களின் நீண்ட நாள் கனவு ஈடேறும்.

சுப ஸ்தானத்தில் குருவும், 5 ஆம் இடத்தில் சுக்கிரனும் புதனும் இருப்பதால் அனுகூலங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். திருமண காரியங்கள் கைகூடி வரும்.

எதிரிகள் உங்களைக் கண்டு ஓடி ஒளிவார்கள், பூர்விகச் சொத்துகள் ரீதியான வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கப் பெறும். கணவன்- மனைவி இடையேயான கருத்து வேறுபாடுகள் ஏற்படும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகளுடன் பிரச்சினைகள் ஏற்படும்.

பிள்ளையார் மற்றும் துர்கை வழிபாடு செய்து வருதல் வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.