மேஷம் ராசியினருக்கு இந்தப் பங்குனி மாதத்தில் எதிலும் முயற்சி செய்த பிறகே எடுக்கும் காரியங்கள் நிறைவேறும். கிரகங்கள் சாதகமற்ற இடங்களில் இருப்பதால் எடுத்தக் காரியங்களை இருமுறை செய்ய வேண்டி வரக்கூடும். அதற்கேற்ப தகுந்த பலன்களும் கிடைக்கும்.
இதுவரை குரு பகவான் துலாம் ராசியில் ஏழாம் பார்வையாக உங்கள் வீட்டைப் பார்த்து உங்களுக்கு பல வித நன்மைகள் கொடுத்து வந்தார். இப்பொழுது ஏப்ரல் 10-ல் வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு திரும்ப வருவதால் அதிக அளவில் நன்மைகள் தரப்போகிறார். சுக்ரன் உங்கள் ராசியில் மார்ச் 27-ம் தேதியில் வருவதால் உங்கள் பேச்சில் கவர்ச்சி கூடும்.
சந்திரன் சாதகமான பலன்களை தரக்கூடும். உங்கள் ராசி நாயகன் செவ்வாய் சாதகமான நிலையில் இல்லாவிட்டாலும் பெரிதும் பாதிப்பு ஏற்படுத்த மாட்டார். சூரியன், புதன் பத்தாம் வீட்டில் இருப்பதும், ராகு கடகத்தில் இருப்பதும், கேது பத்தாம் வீட்டில் இருப்பதும், சனி பகவான் ஒன்பதாம் வீட்டில் இருப்பதும் சாதகமான பலன்களை தராது. புதன் 12ம் வீடான மீனத்தில் இருப்பதால் மேஷம் ராசியினருக்கு சில தடைகளை ஏற்படுத்துவார்.
மேஷம் ராசியினருக்கு பங்குனி மாதத்தில் நல்ல செய்திகள் வரக்கூடும். அலுவலகத்தில் நற்பெயர்,சிறப்பான வளர்ச்சி காண்பர். சுய தொழில் செய்பவர்களுக்கு கடன் கிடைக்கும். ஒரு சிலர் தங்களின் தொழிலை விரிவாக்கம் செய்வார்கள்.
12-ம் இடத்து சூரியன் பணம் விரையம் ஏற்படுத்துவார். சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு பகைவர்களால் அவ்வப்பொழுது தொல்லைகள் வரக்கூடும். மார்ச் 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை சிறு இடையூறுகள் சந்திக்க நேரிடும். அதன் பிறகு எதிர்ப்பார்த்த பணம் கைக்கு வரக்கூடும்.
மார்ச் 24, 25, 26-ம் நாட்களில் அதிக அளவில் நன்மை நடைபெற போகிறது. கணவன், மனைவி இடையே ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குறிப்பாக மார்ச் 25, 26-ம் தேதி ஆடை, அணிகலன்கள், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
உறவினர்கள் வருகை உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடும். இதுவரை எவ்வித சுபநிகழ்ச்சிகள் நடைபெறவில்லை என்று புலம்பி கொண்டு இருப்பவர்களுக்கு குருவால் சுப நிகழ்வுகள் ஏற்படக்கூடும். ஏப்ரல் 9-ம் தேதிக்கு பிறகு குருவால் மங்கள நிகழ்வுகள் நடைபெற கூடிய சூழ்நிலை உருவாகும்.
மேஷம் ராசியினருக்கு வேலை பளு அதிகரிக்கக் கூடும் . ஒரு சிலருக்கு வேலை மாற்றம் வர வாய்ப்பு இருக்கிறது. எதிலும் நிதானமாக, சிந்தித்து செயல்படுங்கள். சக ஊழியர்களிடம் ஆதரவு கிட்டும். மேலும் அதிகாரிகளுடன் சற்று பணிவாக நடந்துக் கொள்ளுங்கள்.
இதுவரை எதிர்ப்பார்த்து கொண்டிருந்த ஒப்பந்தங்கள் முடிவாவதற்கு சற்று தடை வரலாம். மார்ச் 26 –க்கு பிறகு ஒப்பந்தம் கையெழுத்தாகும். மேஷம் ராசி மாணவர்கள் சற்று சிரத்தையுடன் படிக்க வேண்டும். புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் நண்பர்களால் பிரச்சனை வரக்கூடும்.
பரிகாரம் :
மேஷம் ராசியின் ராசி நாயகன் செவ்வாய் என்பதால், செவ்வாய் கிழமையில் முருகன் வழிபாடு செய்தால் தடை, தடங்கல் அகலும். மேலும் சிவன் வழிபாடு செய்து வந்தால் அதிக அளவில் நன்மைகள் உண்டாகும்.