மேஷம் பங்குனி மாத ராசி பலன் 2023!

மேஷ ராசியினைப் பொறுத்தவரை பண விஷயமும், குடும்ப விஷயமும் உங்களுக்குச் சாதகமான மாதமாக இருக்கும். உங்கள்மீது விழுந்த அவப்பெயர் தவிடு பொடியாகும் மாதமாக பங்குனி மாதம் இருக்கும். உங்கள்மீதான மரியாதை, செல்வாக்கு அதிகரிக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் இருந்த பின்னடைவு சரியாகும். விரய மருத்துவச் செலவுகள் இருந்தாலும், உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் அனைத்தும் சரியாகும்.

குரு பகவான் விரய ஸ்தானத்தில் இருந்தாலும், வீடு, மனை வாங்குதல், வண்டி, வாகனங்கள் வாங்குதல் என லாபங்களை கொடுப்பார். மாதம் முழுவதும் சுக்கிரன் உங்களுக்குச் சாதகமாக உள்ளார்; நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறும்.

பண வரவு சிறப்பாக இருக்கும். வார்த்தைகளால் அனைவரையும் கவர்வீர்கள், தொழில் மற்றும் வியாபார ரீதியாக வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை எதிர்பார்த்த வரன் கைகூடும். விரய ஸ்தானத்தில் இருக்கும் புதன், நீச்ச பங்க பலன் அடைவதால் தைரியத்தைக் கொடுப்பார்.

எதிர்கால வளர்ச்சிக்காகக் கடன் வாங்குவீர்கள். தொழில்ரீதியாக துணிவுடன் அபிவிருத்தி செய்யும் முயற்சியில் களம் இறங்குவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தாமதங்கள், தடங்கல்கள் இருந்தாலும் கடுமையாக முயற்சித்தால் வெற்றி உங்கள் கையை வந்து சேரும்.

குரு பகவானை வழிபட்டு வருதல் வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews