மேஷம் அக்டோபர் மாத ராசி பலன் 2022!

செவ்வாயின் இடமாற்றம் மாத இறுதியில் வக்கிரம் அடைகிறார், 12 ஆம் இடத்தில் குரு, சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைகிறார். 6 ஆம் இடத்தில் புதன்- சுக்கிரன், 7 ஆம் இடத்தில் கேது, ஜென்மத்தில் ராகு என கோள்களின் இட அமைவு உள்ளது.

வேலைவாய்ப்பு ரீதியாக பிரச்சினைகள் இல்லாமல் சுமாராக போகும். பெரிய மாற்றங்கள் எதையும் எதிர்பார்க்க வேண்டாம். தொழில்ரீதியாகவும் நஷ்டம் இல்லாமல் தக்க வைத்துக் கொள்ளும் நிலையில் இருக்கும்.

அனைத்துக் கோள்களின் நகர்வுகளும் பெரிய அளவில் சிறப்பானதாக இல்லாத காரணத்தால் திருமண காரியங்களில் தாமதம் ஏற்படும். பெரிய அளவில் சண்டை இல்லாவிட்டாலும் கணவன்- மனைவி இடையே மனக் குறைகள் அதிகமாகவே இருக்கும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை சுமாரானதாகவே இருக்கும், 14 மற்றும் 15 ஆம் நாட்களில் உறவினர்கள் சந்திப்பு நிகழும். வாழ்க்கைத் துணைக்கு உடல் நலக் கோளாறு ஏற்படும். விரயச் செலவுகள் அதிகமாகவே இருக்கும்.

சுப செலவுகளை செய்து விரயச் செலவில் இருந்து தப்பிக்க முயற்சிக்கலாம். மாணவர்களின் கல்வி நலனைப் பொறுத்தவரை போராட்டமான காலமாகவே இருக்கும்.

உடல் நலம் சார்ந்து பயிற்சி செய்யும்போது கவனத்துடன் இருத்தல் வேண்டும். பெற்றோர் உடல் நலனில் அக்கறை தேவை. தாய்வழி சார்ந்த உறவுகளால் உதவிகள் கிடைக்கப் பெறும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment