மேஷம் நவம்பர் மாத ராசி பலன் 2022!

நவம்பர் மாதத்தில் செவ்வாய் வக்கிரம் அடைகிறார், 6 மற்றும் 8 ஆம் வீடுகளில் சனி பகவானும், செவ்வாய் பகவானும் சந்திக்கின்றனர். செவ்வாயின் பார்வை சனியின்மீது விழுவதால் வேலைவாய்ப்புரீதியாக அதிருப்திகள் ஏற்படும். இந்த மாதம் முழுமையும் மந்தநிலை காணப்படுவதாய் உணர்வீர்கள்.

மேலும் புதியதாக எடுக்கும் முயற்சிகள் மனக் குழப்பத்தினை ஏற்படுத்தும், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்ரீதியாக பொறுமையுடன் செயல்பட்டால் அனைத்துப் பிரச்சினைகளும் அதுவாகவே சரியாகும்.

திருமணம் சார்ந்த காரியங்களுக்கு எதிர்பார்த்து இருப்போருக்கு சாதகமான சூழ்நிலைகள் எதுவும் இல்லை.

திருமண வாழ்க்கையினைப் பொறுத்தவரை வாழ்க்கையில் வெறுமை நீடிப்பதுபோல் உணர்வீர்கள். கோபம், எரிச்சல் போன்றவற்றால் கணவன்- மனைவி இடையே பிரச்சினைகள் ஏற்படும்,

காதலர்கள் மத்தியில் பிளவு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உடல் நலனைப் பொறுத்தவரை ஆரோக்கியக் குறைவு ஏற்படும். வீட்டில் மருத்துவம் உட்பட பல விரயச் செலவுகள் ஏற்படும், வாக்குஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் வாதங்களைத் தவிர்க்கவும்.

பண இருப்பு பெரிதளவில் இருக்காது, கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். மாணவர்களைப் பொறுத்தவரை படிப்பில் கவனச் சிதறல் இருக்கும்.

குடும்பத்துடன் சிவ பெருமான் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து வருதல் நல்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.