மேஷம் மே மாத ராசி பலன் 2023!

மே மாதத்தினைப் பொறுத்தவரை குரு- ராகு-சூர்யன்- புதன் என நான்கு கிரகங்களும் 1 ஆம் இடத்தில் உள்ளது. சனி பகவான் 11 ஆம் இடத்தில் இருந்து ஆதாயப் பலனைக் கொடுப்பார்.

சுக்கிரன் இரண்டாம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கு நகர்கிறார். இரண்டு வருடங்களுக்கு வேலைவாய்ப்புரீதியாக சிறப்பான முன்னேற்றங்களைக் காண்பீர்கள்.

மேலும் தொழில்ரீதியாக இதுவரை இருந்துவந்த பின்னடைவுகள் சரியாகும். பொருளாதார ரீதியாக பாதகமான எந்தவொரு விஷயமும் நடக்கப் போவதில்லை.

திருமண காரியங்களில் ஏற்கனவே இருந்த தடைகள் சரியாகும்; உடனே வரன் அமையாவிட்டாலும் முன்புபோல் பெரிய அளவிலான தடைகள் எதுவும் ஏற்படாது.

காதலர்கள் வீட்டில் காதலைச் சொல்ல ஏற்ற காலகட்டமாக இது இருக்கும்; வீட்டில் எதிர்ப்புகள் எழுந்தாலும் இறுதியில் உங்கள் முடிவுக்கு உடன்படுவர். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான உறவில் மூன்றாம் நபர்களால் பிரச்சினைகள் ஏற்படும்.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

சகோதர – சகோதரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். ஆரோக்கியரீதியாக எடுத்துக் கொண்டால் திடீரென கோபம் கொள்வீர்கள். இதனால் இரத்த அழுத்தம் அதிகரித்தல், மன அழுத்தம் ஏற்படுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

மாணவர்கள் கல்விரீதியாக நினைத்ததை செய்து முடிப்பர், உங்களின் கடும் உழைப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

உயர்கல்விரீதியாக வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை பெரிய அளவில் தொந்தரவுகள் இல்லாமல் இருக்கும். வீட்டிற்குத் தேவையான புதுப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.