மேஷம் மார்கழி மாத ராசி பலன் 2022!

ராசிநாதன் செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் உள்ளார். ராசியில் ராகுபகவான் இருப்பது பல வகையில் நன்மைகளையும், சில வகையில் தீமைகளையும் செய்யும்.

ராகு பகவான் இருக்கும் இடத்தினை விரிவாக்கம் செய்வார். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அமையப் பெறும். உடல்ரீதியான பிரச்சினைகள் ஏற்படும், தூக்கம் பெரிதளவில் இருக்காது. மனரீதியான சஞ்சலம் ஏற்படும்.

எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும், குழப்பம் நிறைந்து காணப்படுவீர்கள்.  நல்ல பணவரவு திருப்திகரமாக இருக்கும், குடும்பத்தில் நிம்மதி அதிகரித்துக் காணப்படும். வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் இருப்பதால் பேசும்போது கவனமாகப் பேசுதல் அவசியம்.

புதிதாக வேலைதோடுவோருக்கு வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கப் பெறும். தாய்க்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், தாய்வழி உறவினர்களால் ஆதாயப் பலன்கள் ஏற்படும்.

வீட்டினைப் புதுப்பிக்கும் முயற்சியில் களம் இறங்குவீர்கள். மாணவர்கள் கல்விரீதியாக மேம்பட்டுக் காணப்படுவார்கள். வண்டி, வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். அசையாச் சொத்துகளை வாங்குவதற்காக அட்வான்ஸ் தொகை கொடுப்பீர்கள்.

தொழில்ரீதியாக லாபம் கிட்டும், தந்தை வழி ரீதியான பூர்விகச் சொத்துகள் வந்து சேரும். 6 ஆம் இடத்தினை குரு பகவான் பார்க்கிறார். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். கடன் தொல்லை தீரும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.