மேஷம் ஜூன் மாத ராசி பலன் 2023!

மேஷ ராசியினைப் பொறுத்தவரை சனி பகவான் வக்ரம் அடைகிறார், சனி பகவான் ஆதாயப் பலன்களைக் கொடுப்பார். இதுவரை நீங்கள் செய்த முயற்சிகளுக்கு இவ்வளவு நாட்கள் பலன் இல்லாவிட்டாலும், தற்போது பலன் கிடைக்கும்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை மிகச் சிறந்த மாற்றங்களை எதிர்பார்க்கலாம். தொழில்ரீதியாக நீங்கள் எடுக்கும் முடிவுகளும், முயற்சிகளும் நன்மையிலேயும் லாபத்திலேயும் முடியும்.

செவ்வாய் பகவான் நீச்சம் அடைந்துள்ளார். செவ்வாயுடன் சுக்கிரன் இணைகிறார்; கேந்திரத்தில் குரு அமர்கிறார். மனதில் குழப்பங்கள் அதிக அளவில் இருக்கும்; தைரியம் குறைந்தவராகக் காணப்படுவீர்கள். நீங்கள் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்களுடன் சேர்ந்து செயல்பட வேண்டும். செவ்வாயின் பார்வை சனி பகவான் மீது விழும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை 7 ஆம் இடத்தில் உள்ள கேது பகவானாலும், சுக்கிரனும்- செவ்வாய் பகவான் இணைவாலும் பெரிய அளவிலான மனக் கசப்புகள் இருக்காது; ஆனால் சிறிய அளவிலான வாக்குவாதங்கள், பிரச்சினைகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.

குரு பகவானின் பார்வை 7 ஆம் இடத்தில் விழுகின்றது. திருமண காரியங்களைப் பொறுத்தவரை சிறு சிறு தடைகள் இருக்கும்; ஆனால் எதிர்பார்த்த வரன் கைகூடும்.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

மாணவர்களைப் பொறுத்தவரை எடுக்கும் புது முயற்சிகளில் சாதகமான பலன்களைக் கொடுப்பதாய் இருக்கும்.

உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை அலைச்சல்கள் நிறைந்த மாதமாக இருக்கும்; மேலும் உடல் அளவில் மட்டுமல்லாது மனதளவிலும் வலிமை குறைந்தவராக உணர்வீர்கள்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்; ஆனால் உங்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகாததால் மன வருத்தத்துடன் காணப்படுவீர்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.